மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை, நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு பிரசே செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளப்பெருக்கினால் சேதமடைந்த 13 வீடுகளுக்காக முதற்கட்ட உதவியாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 10,000 ரூபா வீதம் 13 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
மேலும் வௌ்ளத்தல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கரையோர கிராமங்களைச் சேர்ந்த 48 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இதன்போது மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதுதவிர கடந்த ஜீன் மாதம் மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இப் பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 168 வீடுகளுக்கான நிவாரணத்தின் இறுதிக் கொடுப்பனவுக்கான காசோலையினையும் இதன்போது அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் உதவி பிரதேச செயலளர் சுபா சதாகரனிடம் கையளிக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக தேசிய அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரி.ஜனகன், பி.விஜயலக்மனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.