Breaking

Post Top Ad

Sunday, December 15, 2019

மட்டு. திராய்மடு கிராமத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

 
(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ​செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு கிராமத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.


திராய்மடு - சுவிஸ்கிராமம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட  மழை வௌ்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு இதன்போது ​மேற்படி தேசிய மக்கள் முன்னேற்றம் எனும் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு - தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்படி நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

இந் நிகழ்வில் கிராம மட்ட  அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்  தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages