(வவுணதீவு நிருபர்) -
மட்டக்களப்பில் கிழக்கு மண் எனும் வரலாறு சார்ந்த நூல் வௌியீட்டுவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
வைத்திய கலாநிதி சி. சிவச்சந்திரன் எழுதிய கிழக்கு மண் எனும் கிழக்கின் பெருமைகூறும் நூலே இதன்போது வெயியிடப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெ.தவராஜா, பேராசிரியர் எஸ்.யோகராஜா, பேராசிரியர் அம்மன்கிளி, சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சசிதரன், கலாநிதி சிவரத்தினம் உள்ளிட்ட எழுத்தாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நூலுக்கான நயவுரையினை கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்..சசிதரன் வழங்கினார்.
இவ்வாறான எமது வரலாறு, மண்வாசனைகளை எடுத்துக் கூறும் நூல்கள் வௌிவரவேண்டியது காலத்தின் தேவை என இந் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.தவராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.