Breaking

Post Top Ad

Wednesday, September 4, 2019

இவர் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோருகின்றது



சவுதிஅரேபியாவில் தொழிலுக்காக புறப்பட்டு சென்று அங்கு எந்தவித தகவலும் இல்லாத எம்.ரி.கெங்கேஸ்வரி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகப் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.

3 பிள்ளைகளின் தாயான திருமதி. கென்கேஸ்வரி 2013.10.30 அன்று சவுதிஅரேபியாவிற்கு சென்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் அவர் தொடர்பான எந்தவித தொடர்பும் இல்லை.

அவர் தொடர்பான தகவல்களைத் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாம் பிரிவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு 0114374384 / 0112864112 / 0112880500.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages