Breaking

Post Top Ad

Wednesday, September 4, 2019

மட்டக்களப்பு வவுணதீவு பிர​தேசத்தில் புகலிடம் அமைப்பினால் வி​சேட தேவையுடைய சிறுவர்களுக்கு கல்வியை வழங்கும் திட்டம்



(கொக்கட்டிச்சோலை  நிருபர் )

மட்டக்களப்பு மண்முனை ​​​​​​​மேற்கு வவுணதீவு பிர​தேசத்தில் புகலிடம் அமைப்பினால் வி​சேட தேவையுடைய சிறுவர்களுக்கு கல்வியை வழங்கும் பொருட்டு அவ்வாறான சிறுவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்வதற்காக கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் பிரதேச ​​செயலகத்தில் நடை​பெற்றது.

கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைவாக செயற்படுத்தப்பட்டுவரும் இச் ​செயற் திட்டத்தில்  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்வியினை வழங்குமுகமாக அனைவருக்கும் கல்வி எனும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இக் கூட்டத்தின்போது மண்முனை மேற்கு பிரதேசத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்காத சிறுவர்களுக்கு அனைவருக்கும் கல்வி எனும் செயற் திட்டத்திக்கீழ்  புகலிடம் நிறுனத்தின் ஊடாக அரச திணைக்கள ​வெளிக்கள உத்தி​​​​​​யோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் புகலிடம் அனைவருக்கும் கல்வி திட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக வௌிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages