Breaking

Post Top Ad

Wednesday, September 25, 2019

மட்டு. கோட்டை முனை விளையாட்டுக் கழக புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களின் உதவியில் கிரிக்கெட் சங்கம் உதயம்.



மட்டக்களப்பு கோட்டை முனை விளையாட்டுக் கழகத்தின்   புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களால் பாடசாலை கிரிக்கெட் சங்கம் உதயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நிதியீட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கான கிரிக்கெட் சங்கம் உருவாக்ப்பட்டது.


கடந்த கால யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள படுவான்கரை பிரதேச மாணவர்களுக்கு இந்த கிரிக்கெட் சங்கம் எதிர்காலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உண்மை.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரான பேரின்பராஜா சடாற்சரராஜா மற்றும் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளரான சாதாசிவம் சசிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கம் அமைக்கப்ட்டது. இதன் தலைவராக  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் அவர்கள் செயற்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்

 இதன் அங்குரார்பண நிகழ்வு 25.09.2019 அன்று கன்னங்குடா மகாவித்தியாலய மண்டபத்தில் தலைவா சிவானந்தம் சிறிதரன தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக  மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான பேரின்பராஜா சடாற்சரராஜா மற்றும் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான சாதாசிவம் சசிதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் அவர்கள் இச்சங்கத்தை ஆரம்பிக்க முதலில் பிள்ளiயார் சுழி இட்டது கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரான பேரின்பராஜா சடாற்சரராஜா தான் இவருக்கு தான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவராக உள்ளதாக தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் சதாசிவம் சசிதரன் எம்முடன் இச்சங்கத்தில் இணைந்து கொண்டது தமக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி தரவதாக கூறியதுடன் உதைபந்தாட்டத்தில் எம் வலயம் மேலோங்கி செல்வதைப்போன்று கிரிக்கெட் விளையாட்டிலும் நாம் முன்னேர வேண்டும் இதற்காக மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம் பெயர்ந்து வாழும் அங்க்த்தவர்கள் எதவுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பாக குறிப்பிட்டார்.

 இதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான சாதாசிவம் சசிதரன் உரையாற்றுகையில் மட்டக்களப்பின் அன்றைய கல்வி இன்றைய கல்வி என மிக நிதானமாக உரையை  தொடர்ந்து இவ்வமைப்பு மட்டக்களப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டு தற்போது மரணிக்கும் தறுவாயில் உள்ளதாகவும் அதே பொல் இங்கு அல்லாமல் சிறப்பாக செயற்பட வேண்டும் அதற்கு தங்களின் தலைவர் துடிப்பாக செயற்படுவார் என குறிப்பிட்டார். இச்சங்கத்திற்கான நிதியீட்டத்ததை மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களான புவனசிங்கம் வசீகரன் இராமநாதன் உதயராஜன் பேரின்பராசா ரமேஸ்குமார் ஆகியோர் வழங்கியுள்ளதாகவும் முதல் கட்டமாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்ததுடன் இவ்வுதவியை எயர்த்திக் கொள்வதாயின் நீங்கள் தான் இப்பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை உயிர்ப்புள்ள ஒரு சங்கமாக வழிநடாத்தினால் மாத்திரமே செயற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

  இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு லயன்;ஸ் கழகத்தின் ஊடாக 1000 பாடசாலை கல்வி புத்தகங்கள் மட்டக்களப்பு பிராந்திய தலைவர் லயன்ஸ் தர்சனால் வழங்கி வைக்கப்ட்டதுடன். முட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கான காசோலையும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரான பேரின்பராஜா சடாற்சரராஜா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.




















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages