மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு தொகுதி மரக் குற்றிகளை இன்று வௌடளிக்கிழமை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.
கரவெட்டி பிரதான வீதியூடாக உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றிச் சென்ற மேற்படி மரக் குற்றிகளுடன் உழவு இயந்திரத்தையும் அதில் பயணித்த நபர் ஒருவரையும் வவுணதீவு பொலிஸால் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் தொடர்பாக நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக வனஇலாக்கா திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு ள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.