ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்துவிடுவாரென திகதி குறிப்பிட்டு ஆரூடம் கூறி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு இணையத்தளம் ஊடாக ஆருடம் கூறியதாக ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.