Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது



 மக்கள் பிரதிநதியாக தெரிவு செய்யப்பட்டு இலஞ்சம் வாங்கி ஊழல் மோசடிகள் செய்து பணத்தை திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு காலத்திலும் மக்கள் பிரதிநிதிகளாக நிலைக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்


மட்டக்களப்பு மாவளையாறு கைலன் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இறுதிநாளட நிகழ்வு ஞாயற்றுக்கிழமை (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -  கம்பெரலிய திட்டத்தின் கிழ் வழங்கப்படும் பணத்தினை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதில் கிராம மட்ட அமைப்புக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தினை உடனுக்குடன் செலவு செய்வது மிகவும் அவசியமாகும். மக்களுக்காக கிடைக்கும் பணத்தினை விரையம் செய்வது. அபிவிருத்திக்குப் பயன்படுத்தாது மீண்டும் திருப்பி அனுப்புவது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தங்களுக்குரிய பணங்களை கட்டுக் கட்டுக்களாக கைகளுக்கு எடுத்துக்கொண்டு மக்களுக்காக வந்த கம்பெரலிய திட்ட பணத்தில் அபிவிருத்தி செய்யாமல் திருப்பி அனுப்புவது மக்களின் அபிவிருத்திக்குச் செய்யும் பாரிய துரோகமாகமாகும்.

எங்களுக்கு வந்த பணத்தை சரியான முறையில் மக்களுக்காக பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் எந்த ஒப்பந்தகாரரிடமும் பேசவில்லை இலஞ்சம் வாங்கவில்லை. என்றார்






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages