Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

வாகரையில் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிப்பு

 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்          

மட்டக்களப்பு வடக்கு விவசாயப் பணிப்பாளர் வலயத்திலுள்ள வாகரைப் பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சேனைச் செய்கை படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.



வாகரைப் பிரதேச விவசாயிகளை ஒன்றிணைத்த இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கட்கிழமை 28.01.2019 வாகரை கமநல சேவை நிலையத்தில் விவசாய அதிகாரிளால் நடாத்தப்பட்டது.

இதில் பிரதேச விவசாயிகள் தங்களுக்கு படைப்புழுவினால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.

அதேதேவளை, அடுத்த பயிர்ச் செய்கைக்குத் தங்களைத் தயார்படுத்துவதும் இனி வரும் காலங்களில் பூச்சி, பீடை, புழுத் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுபற்றி விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக';கு அறிவுறுத்தினர்.

வாகரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 625 ஏக்கர் சோளச் செய்கையில் 250 ஏக்கர் படைப்புழுவின் தாக்கத்தினால் பாழாய்ப் போயுள்ளது.

இதனிடையே இழப்பீடுகளைக் கோரும்போது உண்மையில் பாதிப்பை எதிர்கொண்டவர்களைத் தவிர மற்றைய மிகச் சிறிதளவு பாதிக்கப்பட்டவர்களும் அறவே பாதிக்கப்படாத விவசாயிகளும் முற்றாக அழிவடைந்த விவசாயிஜகள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு ஒத்துழைகப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டக் கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள், விவசாயப் போதனாசிரியர்கள், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழினுட்ப உத்தியோகத்தர்கள், கமநல அமைப்பின் உறுப்பினர்கள் விவசாயிகள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages