Breaking

Post Top Ad

Sunday, January 27, 2019

வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் செயலாளர்


வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காவும் கட்சியின் புதிய செயலாளர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.– மட்டு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்   தலைவர்- பு.ஹரிகரன்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் தயாஸ்ரீஜெயசேகர அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்;கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தாகவும் தமது அரசியல் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக கட்சியின் புதிய அலுவலகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும் மாவட்டத்தின் ஏனைய தொகுதிகளிலும் உப அலுவலகங்களை அமைத்து அதன் மூலம் அப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சனைகளை இனம் கண்டு தமது அலுவலகத்தினூடக கட்சியின் புதிய செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றிற்கான தீர்வுகளை  பெற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மற்றும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்சியின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ள கட்சியின் புதிய செயலாளர் விரைவில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் திறமையானவர்களை களமிறக்கவுள்ள தாகவும் மாவட்டத்தின் பிரதான கட்சியாக தமது கட்சியை மாற்ற வேண்டி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் கட்சியின் தலைவராக ஓருவர் மட்டும் நியமிக்கப் பட்டுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்பகுதிக்கான தலைவராக தம்மை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் மாவட்ட மக்கள் தம்முடன் இணைந்து எதிர் காலத்தில் பணியாற்ற முன்வரவேண்டுமென

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக நியமனம் பெற்று வந்துள்ள ஹரிகரன் அவரது அலுவலுகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக் சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages