Breaking

Post Top Ad

Sunday, January 27, 2019

இந்து முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்


முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற போதும், இன்று வரை அது தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த ரோஹித - டட்யானா இருவரும் மிகவும் எளிமையான முறையில் கடந்த 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டிய கிராமத்தில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.


முதலில் பௌத்த முறைப்படி திருமணத்தில் இணைந்த இருவரும் நேற்று பம்பலப்பிட்டி தூய மேரி தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமண சடங்கினை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் பாரம்பரியத்திற்கு அமைய புதுமண தம்பதியினர் இன்று திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் தமிழர் கலாச்சார உடையணிந்து கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ரோஹித - டட்யானாவின் எளிமையான திருமணம், அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages