Breaking

Post Top Ad

Thursday, January 31, 2019

காட்டு யானைகளின் வரவேற்புடன் ஆரம்பித்த 40வதுவட்டை பாடசாலையின் விளையாட்டுப் போட்டி.


 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நேற்று(30) புதன்கிழமை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் செ.பரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஒலிம்பிக்தீபம் ஏற்றல், சத்தியப்பிரமாணம், அணிநடை மரியாதை, அஞ்சல், குறுந்தூர ஓட்டங்கள், உடற்பயிற்சி கண்காட்சி, செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இல்ல விளையாட்டுப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக, காட்டு யானைகள் விளையாட்டு மைதானத்தில் நின்றுகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுடன், பாடசாலையின் சுற்றுவேலிகளை உடைக்கின்றமை, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை, மனிதர்களை தாக்குகின்றமை போன்ற செயற்பாடுகளிலும் காட்டு யானைகள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் பாடசாலையின் முன்னால் உள்ள வீடொன்றில் நின்றுகொண்டிருந்த பிள்ளையை பாடசாலை நேரத்தில் காட்டு யானை தாக்கிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காட்டு யானைகளின் தொல்லைகளையும் எதிர்கொண்டு இங்குள்ள மாணவர்கள் கற்றலை தொடரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages