Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை படுகொலை 32வது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.



குறித்த படுகொலை நினைவு நாள் மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவுத்தூபியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி செயலாளர் கே.ஜெகநீதன் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளர் சிவகுமார் (மோகன்) பாக்கியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப்படுகொலையில் உயிர் தப்பியவர்கள், பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு இப்படுகொலையில் நான்கு உறவுகளை இழந்த தாயார் அமரசிங்கம் சதீப்பிள்ளை பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை, மகிழடித்தீவு, முனைக்காடு, தாண்டியடி மற்றும் அம்பிளாந்துறை போன்ற பிரதேசங்களின் கிராமங்களைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் தமிழ் மக்களை வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர்.

இந்தச் சம்பவங்களில் 187 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பலர் படுகாயமடைந்தனர்.

தமிழ் மக்கள் மனதில் மாறாத வடுக்களாக பதிந்துள்ள நீதிகிடைக்காத பல படுகொலைச் சம்பவங்களில் கொக்கட்டிச்சோலை படுகொலையும் ஒன்றாகும்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages