Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

மட்டக்களப்பில் 161 வது மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு!




தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் (திங்கட்கிழமை) மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்தார்.

இந்த மாதிரிக் கிராமம் செமட்ட செவன திட்டத்தின் கீழ் அமைக்கப்ட்டுள்ள 161 வது மாதிரிக் கிராமமாகும்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages