படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதும் .
யாழ் நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் வைக்கப்பட்ட ஊடகவியலா ளார் எஸ்.சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, நினைவுத்தூபிக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
இதவேளை, படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி இந்த நிகழ்விற்கு இணையாக கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பது, யாழ் ஊடக அமைய உறுப்பினர்கள், , கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் தெற்கில் இருந்து வருகை தந்தஊடக செயற்பாட்டிற்கான சுதந்திர இயக்கம் என்பன இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.