Breaking

Post Top Ad

Saturday, January 26, 2019

வல்வெட்டித்துறையில 110 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது


வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பெறுமதி ஒரு கோடியே 65 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பொலிஸார்  சுட்டிக்காட்டினர்.கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா போதைப்பொருளை வேறு இடத்துக்கு கடத்தமுற்பட்ட போதே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள்முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் பின்னரே மேலதிக விவரம் தெரியவரும்”என்றும் பொலிஸார் கூறினர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages