Breaking

Post Top Ad

Tuesday, January 29, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 . 1 வீதம் வறுமை நிலை - வறுமையை ஒழிக்க பல்வேறு வேலைத்திட்டங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை முற்றாக ஒழிக்க பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

வறுமை நிலை எமது நாட்டில் 4 தசம் 1 ஆக இருக்கிறது.  கிழக்கு மாகாணத்தில் வறுமை 7 தசம் 1 ஆகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 தசம் 1 வீதம் வறுமை நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பெரலிய கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சமய ஸ்தலங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை (28) நடைபெற்றது.

மட்டக்களப்பு - ஏறாவூர் மிஸ்பா பள்ளிவாயலில்  இந்நிகழ்வு நடைபெற்றது.



பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் யூ.எல்.எம் ஜெயினுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் மௌலானா இங்கு தொடர்ந்து பேசுகையில்-- கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சமுர்த்திஇ சமுர்த்தி என்று உதவி வழங்கல் நடைபெற்றபோதிலும் மக்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்படவில்லை. சமுர்த்தி உதவி பெறுபவர்களைவிட வாழ்வாதாரம் குறைந்த பலர் சமுர்த்தி திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்களை விழிப்புணர்வூட்டவேண்டிய  தேவை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அடுத்தவாரம் தேசிய அரசு ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் எனக்கு முழு அமைச்சுப்பதவி வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பட்டம் பதவி எனக்கு முக்கியமல்ல. மக்களுக்காக பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளேன். பதவிகள் என்னை அலங்கரிப்பதற்குத் தேவையில்லை.

அந்த பதவிகள் மூலமாக மக்களை வலுவூட்டல் செய்வது போதுமானதாகும். கடந்த காலங்களில் நான் மக்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கின்றேன். இடைக்காலத்தில் நாடாளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறான நிலையில் இங்கு எந்தவொரு அபிவிருதத்;pயும் செய்யப்படவில்லை.


நான் நாடு திரும்பிய பின்னர் உள்ளுராட்சி மன்றத்திலிருந்து எனது அரசியலை மீண்டும் தொடங்கினேன். அப்போது அரிவரி வகுப்பிலிருந்து மீண்டும் படிப்பதாக என்னை விமரிசனம் செய்தனர். உண்மை அதுவல்ல மக்கள்சேவையினை நான் விட்டஇடம் தொட்டஇடத்திலிருந்து  நானே செய்வதற்காகவே அவ்வாறு நடந்தது என்றார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages