( கோகிலன் )
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை கிராமத்தில் காட்டுயானையின் தாக்குதலால் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயித்தியமலை ஔிமடுவிலுள்ள தனது வீட்டின் அருகே செய்கைபண்ணப்பட்ட தனது வயலினை காவல்காக்க நேற்று வௌ்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் சென்ற வேளையில் எதிர்பாராத விதத்தில் இவரை காட்டுயானை தாக்கியதால் இடுப்பிலும் கால்களிலும் அடிபட்டு பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
இவரை உறவினர்கள் காப்பாற்றி கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.