தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் தேர்தல் பிரசார நிதியாக்கம் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி ஜனன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.07.2019 ) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கையில் தேர்தல் செயற்பாட்டினை மிகவும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அதேவேளை நேர்மையானதாகவும் நடாத்துவதற்கு அவசியமான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமெனில் தேர்தலுக்கென செய்யப்படுகின்ற செலவுகள், கிடைக்கின்ற நிதிகள் தொடர்பான தெளிவான விளக்கம் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மக்களுக்கு தௌிவுபடுத்தப்பட்டது.
இத்தகைய தேர்தல் பிரசார நிதியாக்கம் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் நாடெங்கிலும் நடாத்தப்பட்டு வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்வில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர். சசீலன், பப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையாளர் ரோஹண ஹெற்றியாராச்சி, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்hளர், மாகாண இணைப்பாளர் ஏ.எம்.என் விக்ரர், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி ஜனன், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா, உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமானதும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்காக செயற்படுகின்ற ஆர்வலர்கள் சுமார் 125 பேர் வரை கலந்து கொண்டனர்.
இதன்போது இங்கு வருகைதந்தோருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு தேர்தல் திணைக்கள அதிகரிகளால் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.