மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில்; விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தியோர் 15 பேர் , கசிப்பு சாராயத்துடன் இருவர், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 உட்பட 21 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை23ஆம் திகதி கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம். டி.கீத்த வத்தர தலைமையில் சம்பவதினமான நேற்று இரவு 12 மணியளவில் பொலிசார் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் விசேட வீதிச் சோதனை இடம்பெற்றது
இதன் போது மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 15 பேரையும். கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு சாராயம் 2 போத்தல் எடுத்துச் சென்ற இருவரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 4 பேர் உட்ப 21 பேரை கைது செய்தனர்.
இச் சம்பத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.