விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்தனால் மரம் ஒன்றின்கீழ் ஒதுங்கி நின்றவேளையில் இடிமின்னல் தாக்குதலுக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு- பனிச்சையடி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மனோகரன் என்ற 60 வயதுடைய நபரே உயிரிழந்தவரென அடையாளங் காணப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த சடலம்மீதான உடற்கூறு பரிசோதனையை டாக்கடர் கே. சுகுமார் மேற்கொண்டதையடுத்து திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் விசாரணைகளை ஆரம்பித்தார்.
கரடியனாறு பொலிஸார் மரணித்தவரது குடும்ப உறவினர்களது வாக்குமூலத்தினைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.