(எஸ்.சதீஸ்)
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை (Tourism & Hospitality Industry ) தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவழியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு சனிக்கிழமை 20.10.2015 ஆம் திகதி மட்டக்களப்பில், உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரசாத் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் வளவாளராக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பீட பேராசிரியர் எம்.எஸ்.எம் அஸ்லம் கலந்து கொண்டார்.
அவுஸ்திரேலியான் எயீட் (Australian AID ) நிறுவனம் இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து மேற்படி சுற்றுவா விருந்தோம்பல் துறை ஊடாக இலங்கைக்கும் இலங்கை மக்களும் அடையக்கூடிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை நகர் பகுதிகள் மட்டுமல்லாது கிராமங்களிலும் எவ்வாறு செல்லாக்கு செலுத்தப்படவேன்டும், கிராம மக்கள் இந்த சுற்றுலாத் துறை ஊடாக தமது பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்திக்கொள்ளலாம் என்பது பற்றியும் இச் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சுற்றுலாத்துறை ஊடாக மக்கள் தமது குடும்ப பொருளாதாரத்தை பாதுகாப்பாகவும் இலகுவாகவும் வலுப்பெறச் செய்யமுடியும், இவ்வாறான செயற்பாட்டின் வளர்ச்சிக்கு ஊடகத்துறையின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் தௌிவுபடுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.