ஐந்து மாத கைக் குழந்தையின் இளம் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 27.08.2018 மாலை வேளையில் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள தூணடித்தளவாய் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இரு குழந்தைகளின் தாயான அந்தோனி புஸ்பலதா (வயது 28) வுடையது என அடையாளம் காணப்பட்டது.
திங்கட்கிழமை கடைசியாக தனது ஐந்து மாத கைக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தவர் பின்னர் அவர் வசித்த வீட்டிலிருந்து சடலமாகக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூறாய்வுக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post Top Ad
Tuesday, August 28, 2018
Home
Batticaloa
Sri lanka
கைக்குழந்தைக்குத் தாய்ப்பாலுட்டிக்கொண்டிருந்த இளம் தாயின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு
கைக்குழந்தைக்குத் தாய்ப்பாலுட்டிக்கொண்டிருந்த இளம் தாயின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.