மட்டக்களப்பு மாநகர சபையின் 7வது சபை அமர்வின் (14.08.2018) உரையின் போது இதனைத்தெரிவித்தார். அவர்; மேலும் தெரிவிக்கையில்.
அன்மைக்காலமாக எமது கட்சியைப் பற்றியும் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியையும் விமர்சித்து வருவது கவலைக்குரிய விடயமாகும். எமது மாநகரத்தைப் பொறுத்த வரையில் இம்மாநகரத்தின் முதல் முதல்வராக இருந்த சொல்லின் செல்வன் ராஜதுரை ஐயாஅவர்களுக்குப்பின்னர் எமது கட்சியின் தலைவர் சிவ சந்திராகாந்தன் அவர்களின் முயற்சினாலேயே அதிக அபிவிருத்தியை இந்த மாநகரம் கண்டுள்ளது.
அதன் காரணமாகவே எமது தலைவரை இந்த மாவட்டத்தின் மக்கள் இன்னும் மாறக்காமல் உள்ளனர் அதன் வெளிப்பாடுதான் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் எந்த கூட்டணியும் அமைக்காமல் தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமது கட்சிக்கு மக்கள் 43000 ற்கும் மேற்பட்ட வாககுகளை வழங்கி மாவட்டத்தில் 36 ஆசணங்களை பெற்றுத் தந்துள்ளனர்.
.எமது கட்சியின் வளர்சியை பொறுத்துக் கொள்ள முடியாது தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் அரசியலில் இணைந்தவர்கள் எமது கட்சித் தலைவரை விமர்சிப்பது நகைப்பிற்குரிய விடமாகும்.
முடியுமாக இருந்தால் அவரை விமர்சிப்பவர்கள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதர்க்கும், மக்களின் தேவைகள் எவ்வளவோ இருக்கிறது அவற்றினை நிவர்த்தி செய்து விட்டு விமர்சனங்களை முன்வைக்கட்டும் என சபையில் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.