மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.
குறித்த அறிக்கை நேற்று விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அறிக்கை மீதான விவாதம் நேற்று (24) காலை 11.50க்கு ஆம்பமானது. மக்கள் விடுதலை முன்னணி, அறிக்கைக்கு ஆதரவாக சபையில் கருத்துகளை தெரிவித்தபோதும், வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
மாகாண சபை தேர்தல் தொடர்பான புதிய தேர்தல் முறைமைக்கு சிறுபான்மைக் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் கூட்டாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தகது.
Post Top Ad
Saturday, August 25, 2018
மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை தோல்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.