Breaking

Post Top Ad

Sunday, April 29, 2018

யாழில் பேஸ்புக் காதலால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை! காதலன் தலைமறைவு

யாழில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் பேஸ்புக் ஊடாக பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.


கருத்து முரண்பாடு முற்றியதால் குறித்த இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்று காதலியின் நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages