குறித்த சந்திப்பு நேற்று மாநகர சபை முதல்வர் ரீ.சரவணபவனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தூபியை புனரமைத்து அவ்விடத்தினை நினைவுப் பூங்காவாக மாற்றி, மாநகர சபையினூடாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பானது மாநகர சபை முதல்வரது வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடாக பேச்சாளர் சாந்தன் மாவீரர் போராளிகள் நலன் காப்பக பொறுப்பாளர் தீபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.