Breaking

Post Top Ad

Wednesday, December 11, 2019

போரதீவுப்பற்றிலுள்ள வெல்லாவெளி - வேத்துச்சேனை கிராம மக்கள் பற்றி அரசாங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமமானது தாழ் நிலப் பரப்பைக் கொண்டதாகும். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வயல் நிலங்கள் பாதைகள் குடிமனைகள் உள்ளிட்டவை பல பாதிக்கப்பட்டுள்ளன.



இக்கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் புதன்கிழமை விஜயம் செய்து அங்குள்ள நிலவரம் பற்றி,  கிராம உத்தியோகத்தர், கிராம சபை உறுப்பபினர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், பொது மக்கள் போன்றோரிடம் கிராமத்தின் குறைபாடுகள் தேவைகள் பற்றி நேரடியான மக்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் பாதிப்புக்களையும் பார்வையிட்டார்.


இக் கிராமம் மழை வெள்ள அனர்த்த காலங்களில் அதிகளவு பாதிக்கப்படுகின்ற கிராமமாக உள்ளது. 

அந்த வகையில் பாதை அபிவிருத்தி, ஆரம்ப பாடசாலையின் தேவை, வெள்ள அனர்த்தங்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இரு மாடி கொண்ட பல்நோக்குக் கட்டிடம் போன்றவைகள் அவசியத்தேவை பற்றி இப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இங்குள்ள மக்கள் தொகை சுமார் 417 ஆகும், இக் கிராம மக்கள் பற்றி அமைச்சர்கள்,  அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பரோபகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages