Breaking

Post Top Ad

Tuesday, December 10, 2019

சண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அண்மையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

இவர் தற்போது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்துவருபவராவார்.

மேற்படி  மகேந்திரநாதன், கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவில் கனிஸ்ட பொருளாளராக பதவி வகித்ததோடு வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் கிழக்குமாகாண செயலாளராகவும் இருந் துள்ளார்.


மேலும் விளையாட்டு கழகங்கள் கிராமிய அமைப்புக்கள் கோயில் நிருவாக அமைப்பு போன்றவற்றில் பல பதவிகளை வகித்தவர் ஆவார்.

சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு உதவும் கரங்கள் என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனூடாக  நண்பர்களை இணைத்துக்கொண்டு. பல ஏழை மாணவர்களுக்கு உதவி புரிந்து வருகின்றார்.

 மகேந்திரநாதனின் வளர்ச்சியில் அவரது  தாயாரான மனோன்மணி அவர்களின் பங்கு அளப்பரியது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages