மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்கள் தின நிகழ்வு செவ்வாய்கிழமை(01) பிற்பகல் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ, வவுணதீவு பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் சஜித், போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களப் பிரிவும், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவும் இணைந்து இந்த சிறுவர் நிகழ்வினை நாடாத்தினர்.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் கடந்த வருடங்களில் சிறுவர்களின் நலன் சார்ந்த விடயங்கள் அடங்கிய காணொளி இறுவட்டு ஒன்றும் இதன்போது பிரதேச செயலாளரினால் அரசாங்க அதிபரிபருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது, சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
சிறுவர்கள் தமது உரிமையுடன் தொடர்புடைய சூழலையும் சூழலில் உள்ள நல்லவை கெட்டவைகளை அறிந்துகொள்வதற்கு இந்த தினத்தினை சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்திருந்தாலும்கூட இன்றுகூட இந்த சிறுவர்களின் உலகம் மகிழ்ச்சியாக உள்ளதா என்ற கேள்வி நம் மத்தியில் எழுகின்றது. என இன் நிகழ்வில் கலந்துகொண்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.