Breaking

Post Top Ad

Monday, October 28, 2019

மட்டக்களப்பு மேற்கு ஏறாவூர் பற்று கோட்டத்தில் பல்சமய மாணவர்கள் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினர்.



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் பற்று கோட்டத்தில் அனைத்து மத மாணவர்களினதும் தீபாவளிக் கொண்டாட்டம் இன்று காலை நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் வலயக்கல்வி அலுவலகம் மற்றும் கரடியனாறு மகாவித்தியாலயம் போன்றவற்றின் ஏற்பாட்டில் கரடியனாறு மகாவித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை முதல்வர் வி.பரமேஸ்வரன், கௌரவ அதிதிகளாக சிவஶ்ரீ ரி.பாலச்சந்திரன் குருக்கள், இனிபாசேன சார தேரர், அருட்தந்தை அனடனி டிலிமா, மௌலவி ஐ.எம். றியாஸ் பையாழி போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது கரடியனாறு மகாவித்தியாலயம், சேரன்கடவல மகாவித்தியாலயம், மாக்கன் மாக்கார் தேசிய பாடசாலை, அல் அக்சா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்கள மணவர்கள் கலந்துகொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தீபாவளியை கொண்டாடினர்.


இந் நிகழ்வில் தீபாவளியை பரதிபலிக்கும் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட, தீபம் ஏற்றல், பொங்கல் பொங்குதல் மற்றும் பட்டாசு கொழுத்துதல் உள்ளிட்ட விளையாட்டுக்களும் இடம்பெற்றது.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages