(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கணணி கற்றல் நிலையம் செவ்வாய்க்கிழமை (10ம் திகதி) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவனந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில், மட்டக்களப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த நிலையத்தினை திறந்து வைத்தார்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளையும் கணணி அறிவையும் உயர்த்தும் நோக்குடன் வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சினால் மேற்படி கணணி வளநிலையம் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.