மட்டக்களப்பு மேற்கு கல்வி கலயத்திலுள்ள ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தில் மாணவர்களின் இடைவிலகலை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்வாக வீதி நாடகங்கள் அண்மையில் இடம்பெற்றது.
ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல் மற்றும் பாடசாலை வரவின்மை காணப்படுவதால் அதனை தடுக்கும் வகையில் சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரனின் திட்டமிடலில் மேற்படி வீதி நாடகங்கள் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றது.
மாணவர்களையும், பெற்றோர்களையும் விழிப்பூட்டும் வகையில், பன்குடாவௌி, காயான்கேணி, இலுப்படிச்சேனை, கித்தூள் போன்ற இடங்களில் இந்த வீதி நாடகங்கள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வேள்விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் பியோ யூட் ரவீந்திரன், கல்வி திட்ட இணைப்பாளர் ஆர்.அமுதராஜா மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பாடசாலை இடைவலகல் மற்றும் வரவு ஒழுங்கீனம் போன்றவை எதிர்காலத்தில் அம் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். இந்த பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே நாம் இவ்வாறு நிகழ்வுகளை செய்துவருகின்றோம் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.