Breaking

Post Top Ad

Saturday, September 28, 2019

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நன்னீர் மீனவர் சங்கத்தினுடான சந்திப்பு



மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நன்னீர் மீனவர் சங்கத்தின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  (26.09.2019 திகதி ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பாவிப்பது சம்மந்தமான விரிவாக கலந்துரையாடப்பட்டது.அவ்வேளை மீனவர்கள் சட்டவிரோத மீன் பிடி வலைகளை உபயோகிப்பது நிச்சயமாக மீனவர்களாகவே இதனை தடை செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் நெத்தலி வலை பாவிக்கப்பட கூடாது என்றும் மீன்பிடி திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ள எவ்விதமான வலைகளும் பாவிக்கப்பட கூடாது என்று உறுதியாக தீர்மானிக்கப்ட்டது.


நன்னீர் மீனவர் குறித்து கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் குறைகள் ஆராயப்பட்டது.இக்கூட்டத்திற்கு மீனவர்சங்கத்தின் உறுப்பினர்கள் , மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்;  ,மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், கடற்படை ,உயர் பொலீஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages