Breaking

Post Top Ad

Monday, September 16, 2019

கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்-பயணிகள் சிரமம்

பாறுக் ஷிஹான்          

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை  சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதுடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் அரச ஊழியர்கள்  பாடசாலை மாணவர்கள்  நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.



இலங்கை போக்குவரத்து சபை கல்முனை ஊழியர்கள்  சாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) காலை  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஊடகங்களிற்கு இவ்வாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு  பதவி உயர்வு  தற்காலிக  ஊழியர்கள் நிரந்தர நியமனம் என்பவற்றை கடந்த காலங்களாக  வலியுறுத்தி வருகின்றோம்.எனினும் எதுவித நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவே இப்போராட்டத்தை தொடர்ந்த முன்னெடுக்கவுள்ளோம் என கறிப்பிட்டனர்.

அத்துடன்  இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே  போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தி  இந்த கவனயீர்ப்பு பணிபகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும் இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages