(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேசத்தில் இருந்து 121 குடும்பத்திற்கு இந்த மலசல கூடம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, பிரதேச சபை பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இங்கு வருகைதந்த 121 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைக்கும்பொருட்டு தெரிவுசெய்யப்பட்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.