Breaking

Post Top Ad

Saturday, February 2, 2019

சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு



நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு மட்டக்களப்பு டேபா மண்பத்தில் நடைபெற்றது.


2020 ஆம் அண்டில் பாதுகாப்பான சிறுவர் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்களின் பங்கேற்புடன் யுனிசெப் மற்றும் சர்வோதய நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்ததாக  நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம்  பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், நீதி,  சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி , சிறுவர் நன்னடத்தை ஆகிய அமைச்சுக்களின் நேரடி ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி மற்றும் பதுளை ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களின் ஐந்து கிராமங்களில்  முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளதையடுத்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நொச்சிமுனை கிராமத்தில் அமுல்செய்யப்பட்ட இத்திட்டம் பாரிய வெற்றியினை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள்மூலம் அறியவந்துள்ளது.

பாடசாலை இடைவிலகல், குடும்ப வறுமை, தாய் வெளிநாடு சென்றமையினால் ஏற்பட்ட பாதிப்பு, மதுபோதை, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு பரிகார நடவடிக்கைகளை செயற்படுத்தியதில் வெற்றிகாணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் பிராந்திய தலைமையதிகாரி திருமதி ரெப்ரென்சியா பட்டசன்  ( Refrencia Patterson) மற்றும் சர்வோதய அமைப்பின்  கிழக்கு மாகாண பணிப்பாளர் ஈஎல்ஏ கரீம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இம்மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் இங்கு தத்தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages