ஏறாவூரில் இன்று மாலை ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள கோட்டல் ,கிழங்கு பொரியல் சுவை கடைகளை பரிசோதித்ததில் மாதக்கணக்கில் பொரித்த தேங்காய் எண்ணைய்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியமை,உணவுக்பொருட்களை சமைத்து பாதுகாக்க பயன்படுத்திய கோப்பை ,பிளாஸ்டிக் வாழிகள் சீமெந்து கலவை,பெயிண்டிங், கழிவறைகளுக்கு பயன்படுத்திய வாழிகளை கொண்டு குடி நீர் எடுக்க பயன்படுத்தியுள்ளார்கள், மற்றும் துருப்பிடித்து இரும்பு துகள்கள் உணவுப்பாத்திரங்களுடன் கலக்கும் வண்ணம் கோப்பைகளை கையாண்டார்கள்,எரிந்து பிளாஸ்டிக் உருகிய கோப்பைகள் பாவித்துள்ளார்கள்,அத்தோடு இதற்கு பாவிக்கும் மசாலா தூள்கள்,உணவுப்பொருட்கள் திறந்த நிலையில் உரிய திகதியற்று காணப்பட்டது .
இப்பொருட்கள் கைப்பற்றியதை தொடர்ந்து குறித்த கடைக்காரர் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்கள்,
இவ் வகையான உணவை உண்பதும் ஒன்றுதான் ஒரேடியாக நஞ்சை குடித்து இறப்பதும் ஒன்றுதான் என இதனைப் பார்த்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
e
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.