Breaking

Post Top Ad

Wednesday, January 30, 2019

'மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து' மக்கள் எதிர்ப்புப் போராட்டம்


திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்ட பகுதியை அண்டி அமைந்துள்ள மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.



புதன்கிழமை 30.01.2019 இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 'மசாஜ் நிலையங்களை மூடு', 'சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி' உடற்பிடிப்பு நிலையங்களா உடலை விற்கும் நிலையங்களா' உங்களுக்கு பணம் வேண்டும் ஆனால் எங்களுக்கு சீரழியாத கலாச்சார கிராமம் வேண்டு:ம்' போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.


உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும் அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த மசாஜ் நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

அலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர்கள் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை  முன்னெடுத்தனர்.

பிரதேச மக்களின் எதிர்ப்பைக் கண்டறிவதற்காக உப்புவெளி பிரதேச சபைச் செயலாளர், பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோரும் பொலிஸ் அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு விரைந்திருந்தனர்.

நடிவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறினால் தொடர்ந்து ஆரப்பாட்டம் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages