மண்முனை தென்மேற்கு பிரதேச பொங்கல் விழா முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் சனிக்கிழமை(26) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேசத்தில் உள்ள 24கிராமசேவையாளர் பிரிவிச்சேர்ந்த மக்களும் ஒவ்வொரு பொங்கல் பானை வீதம் பொங்கலில் ஈடுபட்டனர். 24பொங்கல் பானைகளும் ஒவ்வொரு வகை பொங்கல்களாக அமைந்திருந்தன.
கட்டியம் கூறுதலுடனும், மத்தள இசையுடனும் ஆரம்பித்த பொங்கல் நிகழ்வில், வசந்தன் கூத்து, கவிதை, நாட்டார் பாடல், சிலம்பம் போன்ற கலைகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலான பூசை வழிபாடுகளுடன், கோமாதா பூசையும் இடம்பெற்றது. மேலும், பண்பாட்டு விவசாய தொழிலை எடுத்துக்காட்டும் வகையில், நெற்செய்கை, சோளன் பயிர்செய்கை போன்றன செய்கைபண்ணப்பட்டிருந்ததுடன், அப்பயிர்செய்கையை மிருகங்களிடமும், குருவிகளுடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், அவற்றினை துரத்துவதற்கான காவல் பரண், குடிசை போன்றனவும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் நீர் குடிப்பதற்காக பூவல் தோண்டப்பட்டிருந்ததுடன், விவசாய மற்றும் மீன்பிடி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிலம்பம் கலையை ஆற்றுகை செய்த அ.குமணன் என்ற கலைஞன் போன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையுடன், மாணவர்களும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.