Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை இன்று (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இல்லாத நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச் சாதனை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ்.சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்க மருந்தியல் வைத்தியர் பா.நாகேஸ்வரன் உட்பட தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனையை புரிந்துள்ளனர்.

மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 இலட்சம் ரூபாய் வரை செலுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும். எனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிச்சைக்கான தனியான சத்திர சிகிச்சை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிச்சை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages