Breaking

Post Top Ad

Wednesday, January 30, 2019

விபசார விடுதி சுற்றிவளைப்பு ; ராஜகிரியவில் சம்பவம்


வெலிக்கடை - இராஜகிரிய, மாதியகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பங்கதெனிய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே குறித்த சுற்றிவளைப்பின்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக  வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages