
இந்துக்களின் புனித தினங்களின் ஒன்றான ஆடி அமாவாசை விரத தினத்தன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்களுக்கு செயலமர்வுஒழுங்கு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டணத்தை வெளியிட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆடி அமாவாசை விரதம் தொடர்பான சுற்றறிக்கையை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கவனத்தில் கொள்ளாமை தொடர்பாக இலங்கை ஆரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – 'ஜூலை 29ம் திகதி முதல் 31 வரை விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு மட்டக்களப்பு சர்வோதய வள நிலையத்தில் வதிவிட செயலமர்வொன்றினை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள நிலையில் அதற்கான அமைப்புக் கடிதங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்புப்பட்டுள்ளது இந்த செயலமர்வின் இறுதிநாள் 31ம் திகதி புதன்கிழமை ஆடி அமாவாசை தினமாகும் இந்த தினத்தில் செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது
ஆசிரியர்கள் 2ம் தவணைப பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதோடு வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி அட்டைகளை வழங்குவதற்கு தயார்ப்படுத்திக் கொண்டுள்ள வேளையில் இவ் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கல்வி அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடாகும்.
இதுதொடர்பாக மட்டக்களப்பு கல்வி வலய அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும் மேலும் மாகாண கல்வித் திணைக்களத்தின் கவனத்துக்கு தவறிவிட்டது.
கிழக்கு மாகாணத்தில் பல திட்டமிடல் அதிகாரிகள் கல்விப் புலத்தில் இருந்தும் அவர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் கல்வி நடவடிக்கைகளை குழப்பும் நிலையில் அடைந்துள்ளதோடு 1981ஆம் ஆண்டு பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆடி அமாவாசை விரதம் தொடர்பான சுற்றறிக்கையை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கவனத்தில் கொள்ளவில்லை என அந்த அறிக்கiயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.