
கிழக்கின் திருப்பதியாம் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்தின் இறுதி நாளான 15-7-2019-இரவு 10.30 மணியளவில் ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட மூன்று முஸ்லிம' நபரும் அவா்களுடன் வந்த தமிழ் நபா் ஒருவரையும் ஏறாவூர் பொலிசாாிடம் ஆலய நிருவாகத்தினா் கையளித்துள்ளனர்
சம்பவம் தொடா்பில் மேலும் தொிய வருவதாவது,
ஓட்டமாவடியை சேர்ந்த மூன்று முஸ்லிம் நபர்களும், ஒரு தமிழ் நபரும் ஆலயத்திற்குள் நுளைய முற்பட்ட வேளை அவா்களில் ஏற்பட்ட சந்தேகத்தில் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்படடு ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.
பின் ஆலய நிருபாகத்தினர் ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் நால்வரையும் கைதுசெய்து கொண்ட சென்றனனர்
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.