காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உனவட்டுன - ரூமஸ்ஸல கடற்பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்கள் நால்வர் கடலில் விழுந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஏனைய இருவரும் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
காலி, தெலிக்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிமல்லகஹ பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுகளை உடைய 4 இளைஞர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.