மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிதியம் நிறுவனத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள், நீரை வடிகட்டும் பாத்திரங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் போன்றவை இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கலந்துகொண்டு இப் பொருட்களை வழங்கிவைத்தார்
இந' நிகழ்வில் வவுணதீவு அபிவிருத்தி நிதியம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.
மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்குமாக 115 நுளம்புவலைகளும், 200 நீரை வடிகட்டும் பாத்திரங்களும், 5 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.