மட்டக்களப்பு, அமிர்தகழி ஶ்ரீ சித்திவினாயகர் மகா வித்தியாலயத்தில் ஒரு நாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் இன்று சனிக்கிழமை 2.07.2019 ம் திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு உளநல பயிற்றி ஆலோசனை நிலையத்தினால் நடாத்தப்பட்ட இப் பயிற்சி முகாம், உளநல ஆலோசனையும் வழிகாட்டலும் பிரிவின் ஆசிரியர் அன்ரன் ஜோன் தலைமையில் நடைபெற்றது.
இப் பயிற்சி முகாமில் தரம் 10 மாணவர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் பங்குகொண்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு உளநல பயிற்றி ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை போல் அற்குணநாயகம், பாடசாலை அதிபர் என். தர்மசீலன் மற்றும் ஆசிரியர்கள் உளநல பயிற்றி ஆலோசனை நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு நடைபெற்ற இந்த தலைமைத்துவப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.