ஸ்ரீ மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த 18 படிகள் கொண்ட ஐயப்பன் மண்டல பூஜை - 2018 நேற்று (22) மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெகநாத சிவாச்சாரியார்இ கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் அலய பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலிமாறக் குருக்கள் மற்றும் பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ;ணு அலய குரு ஜெசி குருசுவாமி ஆகியோர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கான மகா சக்தி மற்றும் மகரஜோதி பெரு விழா என்பனவற்றை நடாத்தினர்.
விரத மாலையணிந்த ஸ்ரீ ஐயப்பன் அடியார்கள் பூஜையில் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாயபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.