பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே ரத்துச் செய், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! என கூறும் வகையில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மட்டக்களப்பில் ஒட்டப்பட்டுள்ளது.சம உரிமை இயக்கம் எனும் பெயரில் மட்டக்களப்பு நகர், வலையிறவு, மஞ்சந்தொடுவாய், ஊறணி, நாவற்குடா போன்ற இடங்களில் இவ்வாறான வசனங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மதில் சுவர்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டம் நடைபெற்ற நிலையிலும், அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கு கிழக்கில் பல பகுதிகளிலும் தற்போது போராட்டங்கள் இடம்பெற்றுவரும் வேளையில் இவ்வாறான கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.